Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 24




தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய சாய்

அனைத்து சாய் குழந்தைகளுக்கும் வணக்கம்இன்று  தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னை தடுத்து நிறுத்தி நம் சாய் செய்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன்.  

நான் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறேன், நான் வியாழக்கிழமை விரதம் ஆரம்பிக்க முடியுமா என்று என் சாயிடம் கெஞ்சினேன். உண்ணாவிரதம் இருக்க யாரையும் பாபா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். ஆனால் ஸ்ரீ ஷிர்டி சாய் அவர்களின் ஆசிகளுடன், நான் வியாழன் நோன்பு விரதம் தொடங்கினேன்.  (ஏற்கனவே பாபா விரதம் இருக்க என்ன சொன்னார் என்பது பற்றிய அனுபவத்தை நான் பகிர்ந்துள்ளேன்). 

 138 வியாழன் முழு நாள் பட்டினி விரதம் இருந்திருந்தேன். ஆனால், நான் என் காதல் விஷயத்தில் எந்தஎந்த முன்னேற்றமும் இல்லை.  சில நாட்களுக்கு முன், எனக்கு ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்பட்டு, மிக வலுவாகதற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. கடந்த சில மாதங்களாகவே நான் மிகவும்மனமுடைந்து இருந்தேன்.

பிறகு, நான் காதலிக்கும் பெண் எனக்கு கிடைப்பாளா இல்லையா என்கிற பதிலை பாபாவிடம்  எதிர்பார்த்திருந்தேன். நான் பாபாவிடம் என் காதலில் இறுதி விடை தொடர்பாக, மலேசியாவில் இருக்கும் சாய் சகோதரி ஒருவரை கேட்க முடிவு செய்தேன். அதாவது நான் காதலிக்கும் பெண் எனக்கு கிடைப்பாளா இல்லையா என்று. அவள் என்னிடம் சில சாதகமான செய்திகளை அனுப்பி என்னை உற்சாகப்படுத்த முயற்சித்தாள். எனக்கு அந்த சகோதரியின் பிரார்த்தனை தேவைப்படவில்லை அந்த சகோதரி மூலமாக சாய் என்ன இறுதி பதில் சொல்கிறார் என்பதே எனக்கு தேவைப்பட்டது. அடுத்த ஒரு நாளைக்குள் எனக்கு பதில் சொல்லுமாறு சாயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னர், அடுத்த நாள் மாலைக்குள், என் இதயத்தில் மிகுந்த வலியுடன், என் தற்கொலைத் திட்டங்கள் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எதற்காகவும் தலையை திருப்பிய பொழுது  ஸ்ரீ சாய் பாபாவின் முகம் பக்கத்தில் இருந்த ஒரு பையில் தெரிந்தது.நான் உடனடியாக அதை எடுத்து தெளிவாக பார்த்தேன், ஆமாம் அது பாபாவின் முகம். நான் ஒரு படம் எடுத்து ஒரு சில சாய் பக்தர்களிடம்  அனுப்பினேன்.   அவர்களும் படம் பார்த்த சில நொடிகளுக்குள் பாபாவின் முகத்தை அடையாளம் கண்டு கொண்டார்கள்அந்தப் படத்தை கீழே கொடுத்துள்ளேன். 







  பாபாவை பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்து என் சுமையை அவரிடம் விட்டுவிட்டேன்.மன அழுத்தம் குறைந்து மனம் லேசாக தொடங்கியது, நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்தேன்.என்னை ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது நேர்மறையான எண்ணங்கள்(positive thoughts) தோன்ற ஆரம்பித்தன. பாபாதான் என்னை, தற்கொலையில் இருந்து காப்பாற்றினார். இப்போது இந்த அனுபவத்தை எழுதும்போதும், என் காதல் விசயத்தைப் பற்றி மிகவும் கவலையாகத்தான் இருக்கிறது. நான் நேசிக்கும் பெண்ணுடன் பாபா என்னை நிச்சயம் சேர்த்து வைப்பார் என நான் நம்புகிறேன். நான் 3 + கடின ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறேன். என் 3 + ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின்னால்  பல கண்ணீர் கதைகள் இருக்கின்றது. நான் பாபாவை மிகவும் நம்புகிறேன். உங்கள் அருள் கிடைத்து தங்கள் வாழ்வில் நன்மையான விஷயங்களையும் நேர்மையான விஷயங்களையும் பற்றி நினைக்கட்டும்.
🙏 ஓம் சாய் ராம் 🙏.  




இந்த அனுபவம் முகநூல் பக்கத்திலிருந்து  மொழிபெயர்க்கப்பட்டது. Link for the facebook post.

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 3

நான் மகாபாராயணை விட்டு வெளியேற இருந்தபோது நடந்த   பாபாவின் அற்புதங்கள் ஷீர்டி சாய் பக்தர் ஜெயஸ்ரீ ஜி கூறுகிறார்: சாய் ராம். நான் ஜெயஸ்ரீ, சாய் பாபாவின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகளுக்கு சரியான வரன் கிடைக்காத காரணத்தினாலும், என் மூத்த மகளுக்கு விசா கிடைக்காதது தொடர்பான பிரச்சினைகளாலும் நான் மனம் வருந்தினேன். பாராயணம் செய்தாலும்  கூட பிரச்சனை சுலபமாக தீர்வதாக தெரியவில்லை. சிவராத்திரி காலையில், பாராயணம் செய்த பிறகு நான் மகாபாராயணை நிறுத்தலாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் என் குடும்பத்தில் ஒருபோதும் நல்ல விஷயங்கள் நடக்காது. நான் பாபாவிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், எங்கள் குடும்பத்தை நீங்கள் ஆசீர்வதிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். எங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் மாற்ற முடியாது என்பது எங்கள் கர்மா தான். ” ஆனால் உண்மையில்  நண்பர்களே! அதே நாளில் இரவில் பாபா தனது அற்புதங்களைக் காட்டினார். என் மூத்த மகளுக்கு விசா கிடைத்தது, என் இரண்டாவது மகளை அவளுடைய சக ஊழியர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவளிடம் கூற...