கடைசி மணித்துளிகள் 120 km வேகத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தேன் .. என் ஆருயிர் நண்பன் இலக்கியத்தில் பல சாகசங்கள் செய்தவன் ... சாகித்திய அகடமி பரிசுகள் , பத்மஸ்ரீ , பதம பூஷன் போன்ற பட்டங்கள் பெற்றவன் ... அவன் இலக்கியத்தில் செய்த பல சாதனைகள் விரைவில் நோபல் பரிசு கிடைக்கவும் வழி செய்தது ... எத்தனை சாதனைகள் இந்த சின்ன வாழ்க்கை ஓட்டத்தில் செய்திருக்கிறான் ... !! மனம் மிகவும் பெருமை பட்டது அவன் நண்பன் நான் என்று சொல்லிக்கொள்ள ... அதே சமயம் இதயத்தில் ஒரு சிறு உளியால் எழுப்பிய சப்தம் ... வலி ... என் சாதனை பக்கங்கள் பல இன்னும் வெற்றிடமாகத் தான் இருக்கின்றன ... ஏதோ கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் வேலை , கொஞ்சமாக சம்பளம் , என்னையே கொஞ்சமாக கொஞ்சும் என் மனைவி , இப்படி வாழ்கிறேன் ... சாதனைகளை விட படும் வேதனைகள் அதிகம் .... எப்படி சமாளிக்கிறேன் என்று கேள்வி கேட்க்கிறீர்களா ? எல்லாம் அந்த பச்சைப்புடவைக்காரியின் அருளால் .... பின்னாடி ஒரு bmw கார் என்னை தாண்டி சென்று நின்றது ... இறங்கி ஒருத்தி என் காரை நிறுத்தச் சொன்னாள் ... நீங்கள் எங்கு போகிறீர்கள் ... நான...