Skip to main content

Posts

Showing posts from March, 2020

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 23

பாபா கோவில் பிரசாத்தின் மகிமை உணர்த்திய பாபா  ஓரு நாள் நான் சனிக்கிழமையன்று பாபா கோவிலுக்கு சென்று இருந்தேன். பாபாவின் பாதம் பணிந்து வணங்கிவிட்டு கோவிலில் சுற்றி வந்தேன். பிறகு ஓரிடத்தில் அமர்ந்தேன். அப்போது என் எதிரில் பெரிய வரிசையில் ஆண்களும் பெண்களும் பிரசாதம் பெறுவதற்காக நின்று இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால்  வீட்டிற்கு   போகலாம் என்று வந்து விட்டேன். வீட்டிற்கு வந்தவுடன், எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவர் ஊசி, மருந்து எல்லாம் கொடுத்தும், வீட்டு வைத்தியம் செய்தும் என் வயிற்று வலி தீரவில்லை. அடுத்த சனிக்கிழமையும் வலியுடன் கோவிலுக்கு சென்றேன், வழக்கம் போல பாபாவின் பாதம் பணிந்து வணங்கிவிட்டு கோவிலில் சுற்றி வந்தேன். அன்று அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்தேன். அப்போது அனைவரும் பிரசாதம் பெற வரிசையில் நின்றனர். அப்போது என் மனதில், சென்ற வாரம் பிரசாதம் வாங்கவில்லை. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வயிற்று வலி. எனவே பாபா இன்று நான் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று கொள்கிறேன், பிரசாதம் சாப்பிட்டதும் வயிற்று வலி சரியாகிவிடும் படியாக அருள் பாலிக்கும் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 22

என்   வாழ்க்கையில்   நான்   அனுபவித்த   மிகப்   பெரிய   தெய்வீக   சக்தி  சாய்   பாபா சீரடி சாய்பாபாவின் ஏற்பட்ட என்னுடைய அற்புத அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் . இந்த அனுபவம் எனக்கு ஏப்ரல் 2018 ல் ஏற்பட்டது . நான்   தென்னாப்பிரிக்காவில் 2015 ஆண்டுமுதல் வசித்து வருகிறேன் . பிப்ரவரி 2018   மாதம் என்னுடைய விசா முடிவடைகிறது . என்னுடைய வீசாவை இந்தியா வந்து தான் புதுப்பிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை . விசா அப்ளை செய்வதற்கு முன்பு விசாரித்ததில் 2 3 வாரங்களில் கிடைத்துவிடும் என்று சொன்னார்கள் . விசா பெறுவதற்கு நீண்ட நாட்கள் தேவையில்லை என்று கருதியதால் நான் என்னுடைய கணவரையும் என்னுடைய எட்டு வயது மகனையும் தென்ஆப்பிரிக்காவில் விட்டுவிட்டு நாம் மட்டும் இந்தியா வந்தேன் . நாட்கள் செல்ல செல்ல என் விசா குறித்து தென் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து தூதரகத்தில் இருந்து எந்தவித தகவலும் இல்லை கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்து விட்டது . இதனால் நான் அமைதி இழந்தேன்ன் . தினமும் ...