பல வருடமாக தோல் நோயால் அவதிப்பட்டு இருந்த என்னை குணமாக்கினார் இந்தியாவைச் சேர்ந்த சாய் சகோதரர் சஞ்சீவ் கூறுகிறார் : நான் பாபா பக்தன் . பாபா என் வாழ்க்கையில் எல்லா உயர்வுகளிலும் என்னுடன் இருந்திருக்கிறார் . எனக்கு 57 வயது . சாயியின் கிருபையால் இரண்டு மகள்கள் , அவர்கள் திருமணம் செய்துகொண்ட அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களும் சாய் பக்தர்கள் . நான் எனது 30 வயதில் இருந்தபோது , நான் முழங்காலில் சொரியாஸிஸ் என்னும் மிக கொடிய தோல் அரிப்பு நோயால் அவதிப்பட்டேன் . இந்த நோய் பின் நாளில் மிகவும் பரவியது , அது என் முழங்கால்கள் முழுவதும் மிகவும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுத்து , என்னை எப்போதும் நமைச்சலடையச் செய்தது . நான் அனைத்து தோல் மருத்துவர்களிடமும் காண்பித்தேன் . எல்லா வகையான மருந்துகளையும் முயற்சித்தேன் , ஆனால் ஒரு நிவாரணம் கூட இல்லை . நான் நடுவில் பாபாவை வணங்கவில்லை . பின்னர் 2010 இல் , என் மூத்த மகள் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு விஜயம் செய்தாள் , அவள் விரும்பிய முதல் விஷயம் , எங்...