Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் -16




எனக்கு வர இருந்த மிகப்பெரிய துன்பத்திலிருந்து என்னை காப்பாற்றினார்


நான் என்னுடைய இந்த அனுபவத்தை கண்ணீருடன் எழுதுகிறேன். வெளிநாட்டு கல்வி கடன் பெறுவதற்காக நான் மிகவும் முயற்சி செய்தேன். என்னுடைய ஆவணங்கள் மதிப்பெண்கள் மற்ற எல்லா விஷயங்களும் சரியாக இருந்தாலும் கடைசி நேரத்தில் எனக்கு கடன் வழங்குவது மறுக்கப்பட்டு விடும். அன்றைய தினம் நான் சாய்பாபாவின் படத்தை பல இடங்களில் பார்த்தேன். சாலையில் , கார்களில் நான்  சென்று வந்த கடையில், நண்பரின் வீட்டில் என எல்லா இடங்களிலும் சாய்பாபா படத்தை பார்த்தேன். இவ்வாறாக நான் சாய்பாபா படத்தை பல இடங்களில் பார்த்தால் அன்றைய தினம் ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது என்று எனக்கு தோன்றும். ஆனால் அன்றைய தினமும் எனக்கு கடன் கொடுக்கப்பட்டது என்ற செய்தியே எனக்கு கிடைத்தது நான் மிகவும் மனம் உடைந்தேன். 

கடன் அப்ளிகேஷனில் என் பெயர் மட்டுமன்றி என்னுடைய தந்தையின் பெயரும் இருந்தது. என்னுடைய விபரங்கள் நல்லபடியாக இருந்தாலும் என் தந்தையின் பின்னணி சரியாக இல்லை. 

என் தந்தைக்கு வேறொரு குடும்பம் இருந்தது, அந்தக் குடும்பத்தில் குழந்தைகள் அவருடைய குழந்தைகள் அல்ல இருந்தாலும் அவர் அவர்களின் பெயர்களில் சொத்துக்களை வாங்குவார்.  என் தந்தை பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து நிறைய கடன் வாங்கியிருந்தார், அவர்களுக்கு திருப்பிச் செலுத்தவில்லை. அவர் தனது 3 குழந்தைகள் மற்றும் மனைவிக்கு முன்னுரிமைகளை வழங்க மாட்டார், ஆனால் அந்த குடும்பத்தை எப்போதும் வசதியாக வைத்திருந்தார். 

இந்த வெளிநாட்டு கல்வி  மட்டுமே, எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது. சாய்பாபா படங்களை வழியெல்லாம் பார்த்தும் அன்றைய தினம் என்னுடைய கடன் அப்பிளிகேஷன் மறுக்கப்பட்டதை தெரியவந்து நான் மிகவும் உடைந்து போனேன், அழுதேன், என்னை கைவிட்டு விட்டதாக போன்றவைதான் மிகவும் வருந்தினேன் ஏன் அவரை நம்பினோம் என்று திரும்பத் திரும்ப தோன்றியது. அன்றைய தினம்
இரவு சுமார் 10 மணி, பாபா என் கனவில் வந்து, என்கடன் அனுமதிக்கப்பட்டு அது என்னுடைய அப்பாவின் கணக்கிற்கு செல்லும். பிறகு அதை உன் அப்பா உன் கணக்கிற்கு மாற்றாவிட்டால் நீ என்ன செய்வாய் என்று கேட்டார். 


அப்பொழுது தான் எனக்கு புரிந்தது, சாய்பாபா எவ்வாறு என்னை மிகப்பெரிய துன்பத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார் என்று . ஏனெனில் என் தந்தை எனக்கு அவருடைய கணக்கில் இருந்து 3000 ரூபாய் கொடுப்பதே பெரிய விஷயம் . அவரை நம்பி 30 லட்சம் அவர் கணக்கிற்கு சென்றால் அது என்னுடைய கணக்கிற்கு திரும்ப வரும் என்று கண்டிப்பாக நம்பிக்கையாக சொல்ல முடியாது. அவருக்கு நன்றி தெரிவிக்கவே இதை எழுதுகிறேன். சில நேரங்களில் சாய்பாபா நமக்கு செய்யும் நன்மைகளை நம்மால் புரிந்து கொள்ள இயலாது, அதனால் நாம் நாம் நினைத்தவை எல்லாம் நடக்கவில்லை என்று அவர் மீது நம்பிக்கை இழக்கிறோம் . அவர்மீது வருத்தம் கொள்கிறோம்வருத்தம். ஆனால் நமக்கு நம் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதையே அவர் நமக்கு செய்கிறார். அவர் வழிகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு பக்குவம் இல்லை.

நான் அவரை முழு மனதுடன் நேசிக்கிறேன், நான் வெளிநாடு செல்லாவிட்டாலும், என் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன், அச்சமின்றி நடத்துவேன், ஏனென்றால் அவர் என் பக்கத்தில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.


ஜெய்
 சாய்ராம்.
https://www.quora.com/ இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 24

தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய சாய் அனைத்து சாய் குழந்தைகளுக்கும் வணக்கம் .  இன்று   தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னை தடுத்து நிறுத்தி நம்   சாய் செய்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன் .   நான் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறேன் , நான் வியாழக்கிழமை விரதம் ஆரம்பிக்க முடியுமா என்று என் சாயிடம் கெஞ்சினேன் . உண்ணாவிரதம் இருக்க யாரையும் பாபா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் . ஆனால் ஸ்ரீ ஷிர்டி சாய் அவர்களின் ஆசிகளுடன் , நான் வியாழன் நோன்பு   விரதம்   தொடங்கினேன் .  ( ஏற்கனவே பாபா விரதம் இருக்க என்ன சொன்னார் என்பது பற்றிய அனுபவத்தை நான் பகிர்ந்துள்ளேன் ).   138 வியாழன் முழு நாள் பட்டினி விரதம் இருந்திருந்தேன் . ஆனால் , நான் என் காதல் விஷயத்தில் எந்த .  எந்த முன்னேற்றமும் இல்லை .   சில நாட்களுக்கு முன் , எனக்கு ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்பட்டு , மிக வலுவாகதற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன . கடந்த சில மாதங்களாகவே நான் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 3

நான் மகாபாராயணை விட்டு வெளியேற இருந்தபோது நடந்த   பாபாவின் அற்புதங்கள் ஷீர்டி சாய் பக்தர் ஜெயஸ்ரீ ஜி கூறுகிறார்: சாய் ராம். நான் ஜெயஸ்ரீ, சாய் பாபாவின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகளுக்கு சரியான வரன் கிடைக்காத காரணத்தினாலும், என் மூத்த மகளுக்கு விசா கிடைக்காதது தொடர்பான பிரச்சினைகளாலும் நான் மனம் வருந்தினேன். பாராயணம் செய்தாலும்  கூட பிரச்சனை சுலபமாக தீர்வதாக தெரியவில்லை. சிவராத்திரி காலையில், பாராயணம் செய்த பிறகு நான் மகாபாராயணை நிறுத்தலாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் என் குடும்பத்தில் ஒருபோதும் நல்ல விஷயங்கள் நடக்காது. நான் பாபாவிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், எங்கள் குடும்பத்தை நீங்கள் ஆசீர்வதிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். எங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் மாற்ற முடியாது என்பது எங்கள் கர்மா தான். ” ஆனால் உண்மையில்  நண்பர்களே! அதே நாளில் இரவில் பாபா தனது அற்புதங்களைக் காட்டினார். என் மூத்த மகளுக்கு விசா கிடைத்தது, என் இரண்டாவது மகளை அவளுடைய சக ஊழியர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவளிடம் கூற...