நினைத்தவுடன் வந்து உதவிய ஹனுமான் நான் அனுமான் பக்தை , நான் தினமும் அனுமன் சாலிசா படிப்பேன். அனுமன் சாலிசா குறித்து என்னுடைய அற்புதமான அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . இந்த அனுபவம் எனக்கு 2014 ம் ஆண்டு ஏற்பட்டது . நான் ஜே . எஃகே விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்ல வேண்டும் . விமானத்திற்கு ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது . நான் டெர்மினல் ஒன்றிலிருந்து ஏர் பிரான்ஸ் விமானத்தை பிடிக்க வேண்டும் . டெர்மினல் ஒன்றுக்கு சென்ற பின்புதான் எனக்கு தெரிந்தது , நான் செல்ல வேண்டிய டெர்மினல் , டெர்மினல் 3 என்பதும் , நான் தவறாக டெர்மினல் ஒன்றிற்கு வந்துவிட்டேன் என்பதும் அப்போது தான் தெரிந்தது . செக் - இன் கவுண்டரை இன்னும் பத்து நிமிடத்தில் மூடிவிடுவார்கள் . டெர்மினல் ஒன்றிலிருந்து டெர்மினல் மூன்று செல்ல கிட்டத்தட்ட அரைமணி நேரமாவது ஆகும் . நான் இந்த விமானத்தை விட்டு விட்டால் நான் செலவு செய்த டிக்கெட் அனைத்தும் வீணாகிவிடும். டிக்கெட் பணத்தை நான் திரும்பப் பெற இ...