Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் -20


நினைத்தவுடன் வந்து உதவிய ஹனுமான்

நான் அனுமான் பக்தை , நான் தினமும் அனுமன் சாலிசா படிப்பேன். அனுமன் சாலிசா குறித்து என்னுடைய அற்புதமான அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அனுபவம் எனக்கு 2014ம் ஆண்டு ஏற்பட்டது. நான் ஜே.எஃகே  விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்ல வேண்டும். விமானத்திற்கு ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது. நான் டெர்மினல் ஒன்றிலிருந்து ஏர் பிரான்ஸ் விமானத்தை பிடிக்க வேண்டும். டெர்மினல் ஒன்றுக்கு சென்ற பின்புதான் எனக்கு தெரிந்தது,நான் செல்ல வேண்டிய டெர்மினல், டெர்மினல் 3 என்பதும், நான் தவறாக டெர்மினல் ஒன்றிற்கு வந்துவிட்டேன் என்பதும் அப்போது தான் தெரிந்தது. செக்-இன் கவுண்டரை  இன்னும் பத்து நிமிடத்தில் மூடிவிடுவார்கள். டெர்மினல்  ஒன்றிலிருந்து டெர்மினல் மூன்று செல்ல கிட்டத்தட்ட அரைமணி நேரமாவது ஆகும். நான் இந்த விமானத்தை விட்டு விட்டால் நான் செலவு செய்த டிக்கெட் அனைத்தும் வீணாகிவிடும். டிக்கெட் பணத்தை நான் திரும்பப் பெற இயலாது. அதுமட்டுமன்றி கண்டிப்பாக மும்பைக்கு சென்றாக வேண்டிய கட்டாயம். என்னுடன் என்னுடைய 15 வயது மகளும் இருந்தாள். இந்த இக்கட்டான நேரத்தில் என்ன செய்வது என்று புரியாமல் மனதில் அனுமன் சாலிசாவை சொல்ல ஆரம்பித்தேன். ஹனுமான் என் கண்முன் நிற்பது போல் எண்ணி அவரிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை காப்பாற்றும்படி அனுமனை மனதார வேண்டினேன். திடீரென ஒரு ஆப்ரிக்கர் நாட்டவர்  என்னிடத்தில் வந்து என்ன பிரச்சனை என்று என்னிடம் கேட்டார்.  நான் அவரிடம் என்னுடைய இக்கட்டான சூழ்நிலையை பற்றி சொன்னேன். அவர் என்னை அமைதிப்படுத்தி, கவலைப்படாதீர்கள் உங்களை நான் ஐந்து நிமிடத்தில் டெர்மினல் 3க்கு அழைத்துச் செல்ல முடியும் என்று சொன்னார். அவர் எங்களை அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு குறுக்கு வழியில் அவரஅழைத்துச் சென்றார். அந்த வழியில் 7 நிமிடங்களில் நாங்கள் மும்பைக்கு திரும்பும் விமானத்தின் கவுன்டரில் இருந்தோம். நான் செக்-இன்யை முடித்த பிறகு அவருக்கு நன்றி சொல்ல அவரை தேடினேன். அவரை எங்கும் காணவில்லை. இந்த சம்பவம் நடந்தது இந்தியாவில் அல்ல அமெரிக்காவில். எப்பொழுதெல்லாம் எனக்கு பிரச்சனை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் ஹனுமான் சாலீஸாவைப் நம்பிக்கையுடன் சொல்லி அனுமனை வேண்டும் போதெல்லாம் அவர் என்னை அனைத்து வித பிரச்சனைகள் இடமிருந்தும் காப்பாற்றியுள்ளார். நான் தினமும் படிக்கும் ஹனுமான் சாலிசா என்னையும் என் குடும்பத்தையும் காக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. நினைத்தவுடன் வந்து காப்பாற்றும் அனுமனுக்கு என்னுடைய மற்றும் என் குடும்பத்தின் உடைய நன்றியும் வணக்கங்களும்.



Dhiraj Kakad, works at Business
 Sep 14, 2018 
https://www.quora.com இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 24

தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய சாய் அனைத்து சாய் குழந்தைகளுக்கும் வணக்கம் .  இன்று   தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னை தடுத்து நிறுத்தி நம்   சாய் செய்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன் .   நான் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறேன் , நான் வியாழக்கிழமை விரதம் ஆரம்பிக்க முடியுமா என்று என் சாயிடம் கெஞ்சினேன் . உண்ணாவிரதம் இருக்க யாரையும் பாபா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் . ஆனால் ஸ்ரீ ஷிர்டி சாய் அவர்களின் ஆசிகளுடன் , நான் வியாழன் நோன்பு   விரதம்   தொடங்கினேன் .  ( ஏற்கனவே பாபா விரதம் இருக்க என்ன சொன்னார் என்பது பற்றிய அனுபவத்தை நான் பகிர்ந்துள்ளேன் ).   138 வியாழன் முழு நாள் பட்டினி விரதம் இருந்திருந்தேன் . ஆனால் , நான் என் காதல் விஷயத்தில் எந்த .  எந்த முன்னேற்றமும் இல்லை .   சில நாட்களுக்கு முன் , எனக்கு ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்பட்டு , மிக வலுவாகதற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன . கடந்த சில மாதங்களாகவே நான் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 3

நான் மகாபாராயணை விட்டு வெளியேற இருந்தபோது நடந்த   பாபாவின் அற்புதங்கள் ஷீர்டி சாய் பக்தர் ஜெயஸ்ரீ ஜி கூறுகிறார்: சாய் ராம். நான் ஜெயஸ்ரீ, சாய் பாபாவின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகளுக்கு சரியான வரன் கிடைக்காத காரணத்தினாலும், என் மூத்த மகளுக்கு விசா கிடைக்காதது தொடர்பான பிரச்சினைகளாலும் நான் மனம் வருந்தினேன். பாராயணம் செய்தாலும்  கூட பிரச்சனை சுலபமாக தீர்வதாக தெரியவில்லை. சிவராத்திரி காலையில், பாராயணம் செய்த பிறகு நான் மகாபாராயணை நிறுத்தலாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் என் குடும்பத்தில் ஒருபோதும் நல்ல விஷயங்கள் நடக்காது. நான் பாபாவிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், எங்கள் குடும்பத்தை நீங்கள் ஆசீர்வதிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். எங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் மாற்ற முடியாது என்பது எங்கள் கர்மா தான். ” ஆனால் உண்மையில்  நண்பர்களே! அதே நாளில் இரவில் பாபா தனது அற்புதங்களைக் காட்டினார். என் மூத்த மகளுக்கு விசா கிடைத்தது, என் இரண்டாவது மகளை அவளுடைய சக ஊழியர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவளிடம் கூற...