Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் -19





சாய் சத்யவிரத பூஜா என் கவலையை போக்கி நிம்மதியை கொடுத்தது


நான் ஒரு சாய் பக்தை என்னுடைய அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 
என் சகோதரியின் உடல்நிலை அவ்வளவாக சரியாக இல்லை. அவளுடைய மகன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்பிற்காக வீட்டிலிருந்து படிக்கலாமா அல்லது ஹாஸ்டல் சென்று படிக்கலாமா என்று முடிவெடுக்கக் கூடிய ஒரு கட்டாயமான சூழ்நிலை. மகன் ஹாஸ்டல் சென்று விட்டால் அவளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத ஒரு சூழ்நிலை. அத்தகைய சூழ்நிலையில் நாம் சாய் சத்யவிரத பூஜை பூஜையை முதன்முதலாக அவளுக்காக செய்தேன் செய்த அன்று நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிற பிக்சர் மெசேஜ் எனக்கு கிடைத்தது அது போலவே அவர்கள் நல்ல பள்ளிக்கு அருகே வீடு மாறி சென்று எப்பொழுது சாயின் அருளால் முதலில் இருந்ததை விட ஒரு நல்ல சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறாள் சாய் அன்புக்கும் கருணைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அவரின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். நம்பிக்கையுடன் குருவை வணங்கினால்  அவர் என்றும் தன்னுடைய பக்தர்களை கைவிடமாட்டார். ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் சாய்! 


Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 24

தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய சாய் அனைத்து சாய் குழந்தைகளுக்கும் வணக்கம் .  இன்று   தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னை தடுத்து நிறுத்தி நம்   சாய் செய்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன் .   நான் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறேன் , நான் வியாழக்கிழமை விரதம் ஆரம்பிக்க முடியுமா என்று என் சாயிடம் கெஞ்சினேன் . உண்ணாவிரதம் இருக்க யாரையும் பாபா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் . ஆனால் ஸ்ரீ ஷிர்டி சாய் அவர்களின் ஆசிகளுடன் , நான் வியாழன் நோன்பு   விரதம்   தொடங்கினேன் .  ( ஏற்கனவே பாபா விரதம் இருக்க என்ன சொன்னார் என்பது பற்றிய அனுபவத்தை நான் பகிர்ந்துள்ளேன் ).   138 வியாழன் முழு நாள் பட்டினி விரதம் இருந்திருந்தேன் . ஆனால் , நான் என் காதல் விஷயத்தில் எந்த .  எந்த முன்னேற்றமும் இல்லை .   சில நாட்களுக்கு முன் , எனக்கு ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்பட்டு , மிக வலுவாகதற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன . கடந்த சில மாதங்களாகவே நான் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 3

நான் மகாபாராயணை விட்டு வெளியேற இருந்தபோது நடந்த   பாபாவின் அற்புதங்கள் ஷீர்டி சாய் பக்தர் ஜெயஸ்ரீ ஜி கூறுகிறார்: சாய் ராம். நான் ஜெயஸ்ரீ, சாய் பாபாவின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகளுக்கு சரியான வரன் கிடைக்காத காரணத்தினாலும், என் மூத்த மகளுக்கு விசா கிடைக்காதது தொடர்பான பிரச்சினைகளாலும் நான் மனம் வருந்தினேன். பாராயணம் செய்தாலும்  கூட பிரச்சனை சுலபமாக தீர்வதாக தெரியவில்லை. சிவராத்திரி காலையில், பாராயணம் செய்த பிறகு நான் மகாபாராயணை நிறுத்தலாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் என் குடும்பத்தில் ஒருபோதும் நல்ல விஷயங்கள் நடக்காது. நான் பாபாவிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், எங்கள் குடும்பத்தை நீங்கள் ஆசீர்வதிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். எங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் மாற்ற முடியாது என்பது எங்கள் கர்மா தான். ” ஆனால் உண்மையில்  நண்பர்களே! அதே நாளில் இரவில் பாபா தனது அற்புதங்களைக் காட்டினார். என் மூத்த மகளுக்கு விசா கிடைத்தது, என் இரண்டாவது மகளை அவளுடைய சக ஊழியர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவளிடம் கூற...