பெயர் சொல்ல விரும்பாத ஷீர்டி சாய் பக்தர் கூறுகிறார்: பாபாவின் அனைத்து பக்தர்களுக்கும் ஓம் சாய் ராம். நான் சாய் பாபாவின் சிறிய பக்தன். தினமும் என் நாள் அவரின் பெயரில் தொடங்கி அவருடைய பெயருடன் முடிகிறது. நான் என் கணவர் மற்றும் குழந்தையுடன் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இல்லத்தரசி. நான் சுமார் ஒரு வருடமாக மகாபாராயணத்தில் பாராயணம் செய்து வருகிறேன். பாபா என் குடும்பத்தை ஆசீர்வதித்த எனது மிகச் சமீபத்திய அதிசயத்தை விவரிக்க விரும்புகிறேன். நான் கடந்த சில ஆண்டுகளாக மனதளவில் பலவீனமாக இருந்தேன், மன அழுத்தத்துடன் இருந்தேன். நான் எப்போதுமே இயற்கையாகவே மிகவும் அமைதியான பெண் , ஆனால் கடந்த காலங்களில் சில பயங்கரமான அனுபவங்கள் மற்றும் நான் சந்தித்த கஷ்டங்கள் காரணமாக, மனச்சோர்வுக்குள்ளானேன். எந்த காரணமும் இல்லாமல் நான் தூங்கும்போது அழுவேன், கண்ணீர் வடித்து என் கஷ்டத்தை போக்க முயற்சி செய்தேன். இது எனது குடும்ப வாழ்க்கையையும் பாதித்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கவே பயந்தேன், எங்கோ நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாக ஒரு வலுவான உணர்வு என்னுள் இருந்தது. எனது குழந்தை கடந்த 3 மாதங்களாக சில உடல்நலப்...