Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் -15





என் அம்மாவின் புற்று நோயை குணப்படுத்தினார்


என் பெயர் கமலா தேவி, நான் சாய்பாபாவை மிகவும் நம்புகிறேன், ஏனெனில் அவர் என்னுடைய அம்மாவின் உயிரை காப்பாற்றியவர். பிப்ரவரி1998 என் அம்மாவிற்கு கருப்பை வாயிலில் கட்டி இருப்பதை அறிந்தோம்.  கேன்சர் மிகவும் முற்றிய நிலையில் இருந்தது, மிகவும் வேதனை அடைந்தோம். ஒரு வியாழக்கிழமை எங்கள் ஊரில் அன்னபூரணி அம்மா அவர்கள் நடத்தும் சாயி பஜனையில்  கலந்துகொண்டேன். அன்னபூரணி அம்மா அவர்கள் பஜனை நடக்கும்பொழுது என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய கண்களில் கண்ணீர் வந்தது. நான் அவர்களை பாபா போலவே உணர்ந்தேன், அவர்களிடம் என் அம்மா பற்றிய வேதனையை பகிர்ந்து கொள்வதற்காக சென்றேன். ஆனால் நான் பேசுவதற்குள்  அவர்களே, என்னிடம் உன் அம்மா பற்றி கவலைப்பட வேண்டாம் . இன்னும் ஆறு மாதங்களுக்குள்  உன் அம்மா சரியாகி விடுவார். அவர்கள் பாபாவின் தீர்த்தத்தை கொடுத்து, உன் அம்மா இந்த தீர்த்தத்தை தினமும் பருக வேண்டும் என்று கூறி என்னிடம் தீர்த்தத்தை கொடுத்தார். அன்னபூரணி அம்மா அவர்கள் சொன்ன மாதிரியே தினமும் நான்கு வேளை பாபாவின் தீர்த்தத்தை என் அம்மாவிற்கு நான் கொடுத்து வந்தேன். பாபாவின் மேல் முழு நம்பிக்கையுடன் இருந்தேன். பிறகு ஜூன் 1998ல் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த ஸ்கேனில் கேன்சர் இருந்ததற்கான தடையும் எதுவும் இன்றி என் அம்மா முழுமையாக குணம் அடைந்து இருந்தார். பாபாவிற்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன் . எங்களுக்கு மிகப்பெரிய உதவி அவர் செய்திருக்கிறார் . அவருடைய மகத்துவத்தை விவரிக்கும் பொழுது என் உடல் சிலிர்க்கிறது 

ஜெய் சாய்ராம்.
https://www.quora.com/ இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 24

தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய சாய் அனைத்து சாய் குழந்தைகளுக்கும் வணக்கம் .  இன்று   தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னை தடுத்து நிறுத்தி நம்   சாய் செய்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன் .   நான் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறேன் , நான் வியாழக்கிழமை விரதம் ஆரம்பிக்க முடியுமா என்று என் சாயிடம் கெஞ்சினேன் . உண்ணாவிரதம் இருக்க யாரையும் பாபா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் . ஆனால் ஸ்ரீ ஷிர்டி சாய் அவர்களின் ஆசிகளுடன் , நான் வியாழன் நோன்பு   விரதம்   தொடங்கினேன் .  ( ஏற்கனவே பாபா விரதம் இருக்க என்ன சொன்னார் என்பது பற்றிய அனுபவத்தை நான் பகிர்ந்துள்ளேன் ).   138 வியாழன் முழு நாள் பட்டினி விரதம் இருந்திருந்தேன் . ஆனால் , நான் என் காதல் விஷயத்தில் எந்த .  எந்த முன்னேற்றமும் இல்லை .   சில நாட்களுக்கு முன் , எனக்கு ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்பட்டு , மிக வலுவாகதற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன . கடந்த சில மாதங்களாகவே நான் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 3

நான் மகாபாராயணை விட்டு வெளியேற இருந்தபோது நடந்த   பாபாவின் அற்புதங்கள் ஷீர்டி சாய் பக்தர் ஜெயஸ்ரீ ஜி கூறுகிறார்: சாய் ராம். நான் ஜெயஸ்ரீ, சாய் பாபாவின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகளுக்கு சரியான வரன் கிடைக்காத காரணத்தினாலும், என் மூத்த மகளுக்கு விசா கிடைக்காதது தொடர்பான பிரச்சினைகளாலும் நான் மனம் வருந்தினேன். பாராயணம் செய்தாலும்  கூட பிரச்சனை சுலபமாக தீர்வதாக தெரியவில்லை. சிவராத்திரி காலையில், பாராயணம் செய்த பிறகு நான் மகாபாராயணை நிறுத்தலாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் என் குடும்பத்தில் ஒருபோதும் நல்ல விஷயங்கள் நடக்காது. நான் பாபாவிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், எங்கள் குடும்பத்தை நீங்கள் ஆசீர்வதிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். எங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் மாற்ற முடியாது என்பது எங்கள் கர்மா தான். ” ஆனால் உண்மையில்  நண்பர்களே! அதே நாளில் இரவில் பாபா தனது அற்புதங்களைக் காட்டினார். என் மூத்த மகளுக்கு விசா கிடைத்தது, என் இரண்டாவது மகளை அவளுடைய சக ஊழியர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவளிடம் கூற...