Skip to main content

அடியவர் ரவி அவர்களின் பதிவு -1 - கடைசி மணித்துளிகள்






கடைசி மணித்துளிகள்

120 km வேகத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தேன் ..

என் ஆருயிர் நண்பன் இலக்கியத்தில் பல சாகசங்கள் செய்தவன் ... சாகித்திய அகடமி பரிசுகள் , பத்மஸ்ரீ , பதம பூஷன் போன்ற பட்டங்கள் பெற்றவன் ...

அவன் இலக்கியத்தில் செய்த பல சாதனைகள் விரைவில் நோபல் பரிசு கிடைக்கவும் வழி செய்தது ...

எத்தனை சாதனைகள் இந்த சின்ன வாழ்க்கை ஓட்டத்தில் செய்திருக்கிறான் ... !!

மனம் மிகவும் பெருமை பட்டது அவன் நண்பன் நான் என்று சொல்லிக்கொள்ள ...

அதே சமயம் இதயத்தில் ஒரு சிறு உளியால் எழுப்பிய சப்தம் ... வலி ...

என் சாதனை பக்கங்கள் பல இன்னும்  வெற்றிடமாகத் தான் இருக்கின்றன ...

ஏதோ கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் வேலை , கொஞ்சமாக சம்பளம் , என்னையே கொஞ்சமாக கொஞ்சும் என் மனைவி , இப்படி வாழ்கிறேன் ...

சாதனைகளை விட படும் வேதனைகள் அதிகம் ....


எப்படி சமாளிக்கிறேன் என்று கேள்வி கேட்க்கிறீர்களா ?

எல்லாம் அந்த பச்சைப்புடவைக்காரியின் அருளால் ....

பின்னாடி ஒரு bmw கார்  என்னை தாண்டி சென்று நின்றது ...

இறங்கி ஒருத்தி என் காரை நிறுத்தச் சொன்னாள் ...

நீங்கள் எங்கு போகிறீர்கள் ... நான் அப்போலோ ஹாஸ்பிடல் போகவேண்டும் ...

உங்களால் என்னை அங்கே drop செய்ய முடியுமா ?

உடனே கொஞ்சமும் யோசிக்காமல் ஏன் உங்கள் காருக்கு என்னவாயிற்று ? ....

அது வேறு திசையில் போகிறது ... மேலும் அது என்னுடைய கார் இல்லை ...

நான் சரி என்று சொல்வதற்கு முன் உரிமையுடன் என் காரில் ஏறி உட்கார்ந்தாள் ...

என்னையே ஏற்றிக்கொள்ள இவ்வளவு தயக்கமா ?

குரல் என் கோலக்கிளியுடையது ...

அம்மா நீயா .... நண்பன் ஒருவனுக்கு உடம்பு சரியில்லை அதனால் வேகமாக போய் கொண்டிருந்தேன் ... அதே சிந்தனையில் இருந்ததால் உன்னை சரியாக கவனிக்க தவறி விட்டேன் ...


சரி ... இப்பொழுது உன் நண்பன் தன் கடைசி தருணத்தில் இருக்கிறான் ...

அவன் மனதில் எப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் சொல் பார்க்கலாம் .....

அம்மா என்ன நினைப்பான் , அவனுக்கு நோபல் பரிசு கிடைப்பதை போல் , இன்னும் பல மரியாதைகள் கிடைப்பதை போல் .... இன்னும் பணம் சேருவதைப்போல்

சரி உன்னை சூக்ஷமமாக அவன் மனதில் இப்பொழுது ஓடிக்கொண்டிருளுக்கும் எண்ணங்களை காண்பிக்கிறேன் ....

10 வருடங்களுக்கு முன் ஒரு ஏழை அநாதை சிறுவனுக்கு படிப்பு உதவியை செய்து அதனால் அந்த சிறுவன் அப்பா என்று அவனை கட்டிக்கொண்ட காட்சி ....

பிறகு சிவன் ஆலயம் கட்ட ஒரு பெரிய தொகையை கொடுத்த காட்சி , 100 ஏழை பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்த காட்சி ,

முதியோர் இல்லங்களுக்கு சேவை செய்தது ....

என்ன ரவி திகைத்து ப்போய் விட்டாய் ...  ?

கடைசியில் நினைவில் இருப்பது நீ  என்னென்ன சாதித்தாய் என்ற எண்ணம் அல்ல , எப்படி அன்பை விதைத்தாய் அதை எப்படி வளர்த்தாய் என்பதே ...

அன்பே நான் ... நானே சிவம் ... இந்த நிலைதான் என்னுடன் சேரும் நிலை ...

சாதனைகள் ஓன்றும் செய்யவில்லையே என்று ஏங்காதே ...

எவ்வளவு அன்பை பிறரிடம் காட்டினாய் ...

எவ்வளவு பேருக்கு நீ தெய்வமாக தெரிந்தாய் என்பது தான் முக்கியம் ...

இந்த நினைவுகள் தான் உன் கடைசி மணித்துளிகளில் காட்சிகளாக வரவேண்டும் ...

ப⁴வானி த்வம் தா³ஸே மயி

என்று சொல்ல வந்தவன் வெறும் பவானித்வம் என்று சொல்ல ஆரம்பித்தவுடன் அவனுக்கு  என்னையே கொடுத்து விட்டேன் ...

முழுவதையும் நான் கேட்க வில்லை...

அன்பினால் மட்டுமே என்னை அடிமை படுத்த முடியும் ...

நல்ல நினைவுகள் தான் உன்னுடைய அளவிட முடியாத சாதனைகள்

வேறு எதுவுமே சாதனைகள் ஆகாது ...

அம்மா சரியாக சொன்னாய் ...

உன்னுடன் இப்படி சந்தித்து பேச முடிகிறதே அதுவல்லவோ உன் அருளால் நான் பெற்ற பெரும் சாதனை ....

அன்பை மட்டுமே வளர்த்துக்கொண்டு உன்னிடம் இருந்து பவானித்வம் பெற்றுக்கொள்கிறேன் ...

சிரித்துக்கொண்டே மறைந்தாள் அந்த பேரழகி ....


மனதை தொடும் எழுத்துக்கள் எல்லாம் நல்ல அனுபவங்களாய் மனதில் பதிகின்றன. அந்த விதத்தில் ரவி அவர்களின் பதிவுகள் இந்த வலைதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. 



Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 24

தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய சாய் அனைத்து சாய் குழந்தைகளுக்கும் வணக்கம் .  இன்று   தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னை தடுத்து நிறுத்தி நம்   சாய் செய்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன் .   நான் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறேன் , நான் வியாழக்கிழமை விரதம் ஆரம்பிக்க முடியுமா என்று என் சாயிடம் கெஞ்சினேன் . உண்ணாவிரதம் இருக்க யாரையும் பாபா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் . ஆனால் ஸ்ரீ ஷிர்டி சாய் அவர்களின் ஆசிகளுடன் , நான் வியாழன் நோன்பு   விரதம்   தொடங்கினேன் .  ( ஏற்கனவே பாபா விரதம் இருக்க என்ன சொன்னார் என்பது பற்றிய அனுபவத்தை நான் பகிர்ந்துள்ளேன் ).   138 வியாழன் முழு நாள் பட்டினி விரதம் இருந்திருந்தேன் . ஆனால் , நான் என் காதல் விஷயத்தில் எந்த .  எந்த முன்னேற்றமும் இல்லை .   சில நாட்களுக்கு முன் , எனக்கு ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்பட்டு , மிக வலுவாகதற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன . கடந்த சில மாதங்களாகவே நான் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 3

நான் மகாபாராயணை விட்டு வெளியேற இருந்தபோது நடந்த   பாபாவின் அற்புதங்கள் ஷீர்டி சாய் பக்தர் ஜெயஸ்ரீ ஜி கூறுகிறார்: சாய் ராம். நான் ஜெயஸ்ரீ, சாய் பாபாவின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகளுக்கு சரியான வரன் கிடைக்காத காரணத்தினாலும், என் மூத்த மகளுக்கு விசா கிடைக்காதது தொடர்பான பிரச்சினைகளாலும் நான் மனம் வருந்தினேன். பாராயணம் செய்தாலும்  கூட பிரச்சனை சுலபமாக தீர்வதாக தெரியவில்லை. சிவராத்திரி காலையில், பாராயணம் செய்த பிறகு நான் மகாபாராயணை நிறுத்தலாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் என் குடும்பத்தில் ஒருபோதும் நல்ல விஷயங்கள் நடக்காது. நான் பாபாவிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், எங்கள் குடும்பத்தை நீங்கள் ஆசீர்வதிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். எங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் மாற்ற முடியாது என்பது எங்கள் கர்மா தான். ” ஆனால் உண்மையில்  நண்பர்களே! அதே நாளில் இரவில் பாபா தனது அற்புதங்களைக் காட்டினார். என் மூத்த மகளுக்கு விசா கிடைத்தது, என் இரண்டாவது மகளை அவளுடைய சக ஊழியர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவளிடம் கூற...