Skip to main content

அனுமன் பக்தரின் அனுபவங்கள் - 12




கடும் பனிப் புயலில் இருந்து காப்பாற்றப் பட்டோம் 


எனக்கு அனுமன்ஜியுடன் எனக்கு நிறை அழகான அனுபவங்கள் உள்ளது, ஆனால் ஹனுமான் சாலிசாவுடன் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். அதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு 25 வயது. குளிர்கால விடுமுறையில் நான் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்தேன், என் தங்கையை சிகாகோவில் ஒரு விமானத்திற்காக கொண்டு சென்று விட்டு விட்டு வரவேண்டும். என் ஊரிலிருந்து இது 5 மணிநேர பயணமாகும். நான், என் அப்பா, என் இரண்டு சகோதரிகள் அன்று காலை காரில் பயணித்தோம். நாங்கள் அவளை இறக்கிவிட்டோம்.

அவளை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு திரும்பிய கொஞ்ச நேரத்திலேயே முன் அறிவிக்கப்படாத கடுமையான பனிப்புயல் பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்குள் சாலைகள் பனியால் மூடப்பட்டிருந்தன. பனிப்புயல் உடன் காற்றும் மிகவேகமாக இருந்ததால் நான் அப்பாவிடமிருந்து காரை வாங்கி ஓட்ட ஆரம்பித்தேன். ஏனென்றால் அப்பாவுக்கு இரவில் நன்றாக பார்க்க முடியாது. இங்கே சிக்கல் என்னவென்றால், இந்த நெடுஞ்சாலை மிக நீண்ட நெடுஞ்சாலை வழியில் வேறு எங்கும் திரும்பி செல்ல இயலாது. எங்களால் சாலையைப் பார்க்க முடியவில்லை. நான் முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஹனுமான் சாலிசாவை ஓத ஆரம்பித்தேன்.  என் அப்பாவும் சகோதரியும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். நாங்கள் அனுமன்  சாலிசாவை சொல்ல சொல்ல எங்களுக்கு முன்னே இருந்த பாதையில் புயல்  குறைய ஆரம்பித்தது, சாலையை தெளிவாக பார்க்க முடிந்தது. அடுத்த 100 மைல்களுக்கு பனி குறைய ஆரம்பித்தது. இங்கே வேடிக்கையான விஷயம். நாங்கள் இதை ஓட்டிச் சென்றபின் எனது பின்புறக் கண்ணாடியில் பார்த்தபோது பனி மீண்டும் பெய்ய ஆரம்பித்திருந்தது.  இது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத ஒரு அனுபவம். அனுமன் சாலிசா எங்களை அன்று காப்பாற்றியது. அனுமன் அன்று எங்களைக் காப்பாற்றினார்.

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான்
Sonal Patel, Content Editor for a Health Information Company
Feb 2016
https://www.quora.com/What-are-your-personal-experiences-with-Hanuman-Chalisa இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாயியின் கருணை!

  சாய் ராம்! நன்றி பூஜாஜி.  நான் மகாபாராயணத்தில் இணைந்து சாய்சத்சரித்திரம் படித்தேன் , இதற்கு முன்பும் எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். மற்றொரு சாய் அதிசயத்தை அனைத்து மகாபாராயண் பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆரோக்கியமான வாழ்க்கையை எனக்கு ஆசீர்வதித்த பாபாவுக்கு நான் மனமார்ந்த நன்றி சொல்ல விரும்புகிறேன். நேற்று, நான் எனது வருடாந்திர    மருத்துவ பரிசோதனைக்கு ( medical checkup ) சென்றேன்.  மருத்துவர் பரிசோதித்தபோது என் மார்பில் ஒரு கட்டியைக் கண்டுபிடித்தார். மார்பக புற்றுநோயைப் பற்றி சமீபத்தில் நிறைய கேள்விப்பட்டதால் நான் பயந்தேன். என் நினைவுக்கு வந்த முதல் விஷயம் என்னவென்றால், எனக்கும் இருக்குமோ என்று???  எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 25 கீமோதெரபி மற்றும் சில கதிர்வீச்சுகளுக்கு ஆளானார், அவளும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எங்கள் வாழ்க்கையில் இந்த நேரத்தில் ஒரு மருத்துவ சூழ்நிலையை என் குடும்பத்தினரோ அல்லது என்னால் கையாள முடியாது. 3 டி இமேஜிங் மற்றும் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 4

வாங்குபவரின் வடிவத்தில் பாபா உதவினார் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சாய் பக்தர் புஷ்பா பஜாஜ் கூறுகிறார்: அனைத்து பக்தர்களுக்கும் ஓம் சாய்ராம் . நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த புஷ்பா. நான் மகாபாராயணத்தைத் தொடங்கிய பிறகு எனக்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் சமீபத்தில் எனக்கு ஒரு அழகான அதிசயம் ஏற்பட்டது, இதை பாபாவின் அனைத்து பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னை மகாபாராயணில் சேரச் செய்த பாபாவுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எனக்கு ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளது, இது 2006 முதல்  இயங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் சந்தையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனால் அனைவருக்கும் தெரியும் இந்த நேரத்தில் சந்தை மிகவும் மோசமாக இருந்தது. சந்தை மோசமாக இருப்பதால் வாங்குபவர் மற்றும் வாடகைக்கு வீடு  எடுப்பவர் யாரும் இல்லை, இதன் காரணமாக சந்தை எவ்வாறு மேம்படும் என்று நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன். நவம்பர் 20, 2017 திங்கட்கிழமை அதிகாலையில் நான் வழக்கமாகச் செய்யும் காகட் ஆரத்தி செய்து கொண்டிருந்தேன். நான் ஆரத்தி செய்து கொண்டிருந்தபோத...