Skip to main content

பாபா மிகப் பெரிய மருத்துவர் !

 


ஷீர்டி சாய் பக்தர் பிரியாஜி கூறுகிறார்:  சாய் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சாய் ராம்.  சாயினால் பல அனுபவங்கள் எனக்கு நடந்துள்ளது. ஆனால் இந்த மகாபாராயண் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு ஓய்வு பெற்ற நபர், நான் சாய் சத்சரித்ராவை சில முறை படித்திருக்கிறேன். அக்டோபர் 2018 இல், ஏற்கனவே மகாபாராயன் குழுவில் இருந்த எனது நண்பர் ஒருவர் என்னை அறிமுகப்படுத்தினார்.

நான் பூஜா கார்க் குழுவில் சேர்க்கப்பட்டேன், முதல் பாராயணம் பாபா காலமானதும் அவரது சமாதி பற்றியும் இருந்தது. இந்த அத்தியாயங்கள் ஏன் என்று நான் பாபாவிடம் கேட்டேன். இது வியாழக்கிழமை. என் கணவர் சனிக்கிழமை browse பண்ணிக் கொண்டிருந்தார், திங்கள் காகட் ஆரத்திக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளைப் பெற்றார். எங்களுக்கு அங்கே புகழ்பெற்ற சமாதி தரிசனம் இருந்தது. அங்கே என் மகனுக்கு குழந்தை வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, என் மருமகள் இந்த நல்ல செய்தியை உறுதி செய்தாள்.

நான் பாபாவுக்கு நன்றி தெரிவித்தேன், ஆனால் அவர் எனக்கு இன்னும் சில சோதனைகள் தந்தார். குழந்தையின் இதயத்தில் ஒரு சிறிய துளை இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். அதே நேரத்தில் அதிகமானோர் மஹாபாரயனில் சேர வைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. நான் என் கணவரை சேரச் சொன்னேன் (அவர் என்னை விட தீவிரமாக ஈடுபட்டார்) மற்றும் குழந்தைக்கு சரியாக வேண்டும் என்றும் பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன்.

அடுத்த ஸ்கேன் 3மாதங்களுக்குப் பிறகு செய்த போது மருத்துவர்கள் எந்த துளையும் இல்லை என்று கூறினார்கள். என் பேரன் வயிற்றில் இருந்தபோது இதெல்லாம் நடந்தது. பாபா மிகப் பெரிய மருத்துவர் என் பேரனைக் காப்பாற்றி, எந்த சந்தேகமும் இன்றி நான் உங்களுடன் தான் இருக்கிறேன் என்று உறுதிப்படுத்தினார்.

ஜெய் சாய் ராம்

பிரியா கணேசன்

https://experiences.mahaparayan.com/2020/08/baba-greatest-doctor.html?m=1

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 24

தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய சாய் அனைத்து சாய் குழந்தைகளுக்கும் வணக்கம் .  இன்று   தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னை தடுத்து நிறுத்தி நம்   சாய் செய்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன் .   நான் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறேன் , நான் வியாழக்கிழமை விரதம் ஆரம்பிக்க முடியுமா என்று என் சாயிடம் கெஞ்சினேன் . உண்ணாவிரதம் இருக்க யாரையும் பாபா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் . ஆனால் ஸ்ரீ ஷிர்டி சாய் அவர்களின் ஆசிகளுடன் , நான் வியாழன் நோன்பு   விரதம்   தொடங்கினேன் .  ( ஏற்கனவே பாபா விரதம் இருக்க என்ன சொன்னார் என்பது பற்றிய அனுபவத்தை நான் பகிர்ந்துள்ளேன் ).   138 வியாழன் முழு நாள் பட்டினி விரதம் இருந்திருந்தேன் . ஆனால் , நான் என் காதல் விஷயத்தில் எந்த .  எந்த முன்னேற்றமும் இல்லை .   சில நாட்களுக்கு முன் , எனக்கு ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்பட்டு , மிக வலுவாகதற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன . கடந்த சில மாதங்களாகவே நான் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 3

நான் மகாபாராயணை விட்டு வெளியேற இருந்தபோது நடந்த   பாபாவின் அற்புதங்கள் ஷீர்டி சாய் பக்தர் ஜெயஸ்ரீ ஜி கூறுகிறார்: சாய் ராம். நான் ஜெயஸ்ரீ, சாய் பாபாவின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகளுக்கு சரியான வரன் கிடைக்காத காரணத்தினாலும், என் மூத்த மகளுக்கு விசா கிடைக்காதது தொடர்பான பிரச்சினைகளாலும் நான் மனம் வருந்தினேன். பாராயணம் செய்தாலும்  கூட பிரச்சனை சுலபமாக தீர்வதாக தெரியவில்லை. சிவராத்திரி காலையில், பாராயணம் செய்த பிறகு நான் மகாபாராயணை நிறுத்தலாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் என் குடும்பத்தில் ஒருபோதும் நல்ல விஷயங்கள் நடக்காது. நான் பாபாவிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், எங்கள் குடும்பத்தை நீங்கள் ஆசீர்வதிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். எங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் மாற்ற முடியாது என்பது எங்கள் கர்மா தான். ” ஆனால் உண்மையில்  நண்பர்களே! அதே நாளில் இரவில் பாபா தனது அற்புதங்களைக் காட்டினார். என் மூத்த மகளுக்கு விசா கிடைத்தது, என் இரண்டாவது மகளை அவளுடைய சக ஊழியர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவளிடம் கூற...