ஷீர்டி சாய் பக்தர் சங்கீர்த்தனாஜி கூறுகிறார்:
ஓம் சாய் ராம்! என் பெயர் சங்கீர்த்தனா. எங்கள் குடும்பம் நான் குழந்தை பருவத்தில் இருக்கும் போதிலிருந்தே பாபாவின் பக்தராக இருந்து வருகிறது. என் வாழ்க்கை முழுவதும், சாய் பாபா என்னுடன் இருக்கிறார், எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் என்னுடன் இருப்பார் என்று நான் நம்புகிறேன். இங்கு, எனது கர்ப்ப அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திருமணமான ஒன்றரை வருடத்திற்குப் பிறகு, நானும் என் கணவரும் ஒரு குழந்தைப் பெற விரும்பினோம். நாங்கள் மருத்துவரிடம் சென்றபோது, கருத்தரித்தல் செயற்கை முறை தேவைப்படலாம் என்று கூறினார். அந்த நேரத்தில் என் அம்மா மகாபாராயண் குழுவில் இருந்தார், அவர் என்னை அதில் சேர்த்தார். நான் பாராயணம் செய்யத் தொடங்கினேன், 4 வாரங்களுக்குள், நான் இயற்கையாகவே கருத்தரித்தேன்!
கருத்தரித்த பிறகு, எனது 9 மாத கர்ப்ப காலத்தில் இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்றும் ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தேன். நான் எந்த சிக்கலும் இல்லாமல் என் பெண் குழந்தையைப் பெற்றேன், அதுவும் இயற்கை முறையில் பிரசவம்! எனது முழு கர்ப்பகாலத்திலும் மற்றும் பிரசவத்தின்போதும், சாய் பாபா என்னுடன் இருந்தார், மகாபாராயண் என் வாழ்க்கையின் இந்த கட்டத்தை கடந்து செல்ல எனக்கு பலம் கொடுத்தது.
என்னுடைய இந்த அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் மகாபாராயணத்தைத் தொடர அனைத்து பக்தர்களையும் ஊக்குவிக்க நான் விரும்புகிறேன். பாபா நிச்சயமாக அவரை நம்புபவர்களைப் பார்த்து கொள்வார்.
ஜெய் சாய் ராம்!
சங்கீர்த்தனா
https://experiences.mahaparayan.com/2020/08/doing-babas-mahaparayan-helped-me.html?m=1

Comments
Post a Comment