Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 5





பாபா எனது வேலை சிக்கலை தீர்த்தார்


அமெரிக்காவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத  ஷீர்டி சாய் பக்தர் கூறுகிறார்: ஓம் சாய் ராம்! நான் எம்.பி- 601 குழுவைச் சேர்ந்தவன். எங்களை மகாபாராயண் குழுவிற்கு அறிமுகப்படுத்திய எனது மைத்துனருக்கு நன்றி. நானும் என் மனைவியும் ஆறு மாதங்களுக்கு முன்பு மகாபாராயண் குழுவில் சேர்ந்தோம்.என் குடும்பமே சாய் பாபாவின் பக்தர்கள். ஏப்ரல் 1 ஆம் தேதி வரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. அன்று, எனது மேலாளரும் எச்.ஆரும் என்னை அழைத்தனர். அந்த அழைப்பில் கம்பெனியை விட்டு  வெளியேறும்படி என்னிடம் கேட்கப்பட்டது. வணிக காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன்,  வருத்தப்பட்டேன். நான் எச் 1 பி  விசாவில் இருந்ததால், 60 நாட்களுக்குள் வேறொரு வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.அடுத்த நாள் எங்கள் இளைய மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஷாப்பிங் செல்ல திட்டமிட்டிருந்த அதே நாளில் நான் என் மனைவியிடம் செய்தியை வெளியிடவில்லை. எனது முந்தைய முதலாளி அல்லது நண்பர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வரக்கூடும் என்று நினைத்தேன். ஆனால் என் மனைவியிடமிருந்து நீண்ட நேரம் மறைக்க முடியவில்லை. எனவே, ஏப்ரல் 2 ஆம் தேதி காலை எனது மனைவியிடம் விவரங்களை வெளியிட்டேன். செய்தியைக் கேட்டதும் அவளும் வருத்தப்பட்டாள். வேலை இழப்பு குறித்து மற்றொரு நெருங்கிய நண்பருக்கு தெரிவிக்க முடிவு செய்திருந்தேன். அவர் மதிய உணவுக்கு முன் என்னை அழைப்பதாகத் தெரிவித்திருந்தார். இதற்குப் பிறகு, சாய் பாபா கோயிலுக்கு சென்றோம். நாங்கள் மதியம் ஆர்த்தியில் பங்கேற்றோம், கோவிலில் தரமான நேரத்தை செலவழிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். பின்னர் நாங்கள் ஒரு உணவகத்திற்குச் சென்றோம். வாகன நிறுத்துமிடத்தில், எனது எச் 1 பி க்கு நிதியுதவி செய்யத் தயாரான நிறுவனம் குறித்து எனது நண்பரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நற்செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அது முற்றிலும் சாயின் லீலா. ஏப்ரல் 3 ஆம் தேதி, புதிய நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநருடன் கலந்துரையாடினேன். அவர் எனது வேலை திறமை குறித்து மகிழ்ச்சி அடைந்தார், என்னை நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள தயாராக இருந்தார்.1 வாரத்திற்குப் பிறகு, ஒரு கிளையன்ட் அமைப்பிலிருந்து நேர்காணல் அட்டவணை பற்றி இயக்குநரால் என்னிடம் கூறப்பட்டது. சாய்க்கு நன்றி, நான் நேர்காணலை நன்றாக செய்தேன். எனது முதலாளி உடனடியாக  வேலைக்கான உத்தரவு கடிதத்தை கொடுத்தார் . பின்னர் நான் அடுத்த தடையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நிறுவனத்தின் கொள்கையின்படி கடந்த 7 ஆண்டுகளாக எனது வேலை பின்னணியை ஆராய வாடிக்கையாளர் எனது முதலாளியிடம் கேட்டார். கடந்த 2.5 ஆண்டுகளாக நான் அமெரிக்காவில் இருந்ததால், மீதமுள்ள ஆண்டுகளுக்கான சரிபார்ப்பு இந்தியாவில் செய்யப்பட வேண்டியது அவசியம், மேலும் இந்த செயல்முறை 15 நாட்களில் முடிவடைய வேண்டும்  என்று அவர்கள் எதிர்பார்த்தனர். சாயின் ஆசீர்வாதத்தினால், செயல்முறை 7 நாட்களில் முடிந்தது. எனது முதலாளி எனது வேலைக்கான உத்தரவு கடிதத்தை கொடுத்தார். மே 1 ஆம் தேதி நான் புதிய நிறுவனத்தில் சேர்ந்தேன். ஒரு மாதத்திற்குள், நான் ஒரு புதிய வேலையை தொடங்கினேன். அமெரிக்காவில் நான் தங்கியிருந்த சிக்கலான காலங்களில் என்னையும் எனது குடும்பத்தையும் கவனித்துக்கொண்டதற்கு நன்றி சாய் அப்பா.

ஓம் சாய் ராம்
பெயர் வெளியிட விரும்பாத பக்தர்
03-March-2020
https://experiences.mahaparayan.com இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.




Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 24

தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய சாய் அனைத்து சாய் குழந்தைகளுக்கும் வணக்கம் .  இன்று   தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னை தடுத்து நிறுத்தி நம்   சாய் செய்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன் .   நான் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறேன் , நான் வியாழக்கிழமை விரதம் ஆரம்பிக்க முடியுமா என்று என் சாயிடம் கெஞ்சினேன் . உண்ணாவிரதம் இருக்க யாரையும் பாபா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் . ஆனால் ஸ்ரீ ஷிர்டி சாய் அவர்களின் ஆசிகளுடன் , நான் வியாழன் நோன்பு   விரதம்   தொடங்கினேன் .  ( ஏற்கனவே பாபா விரதம் இருக்க என்ன சொன்னார் என்பது பற்றிய அனுபவத்தை நான் பகிர்ந்துள்ளேன் ).   138 வியாழன் முழு நாள் பட்டினி விரதம் இருந்திருந்தேன் . ஆனால் , நான் என் காதல் விஷயத்தில் எந்த .  எந்த முன்னேற்றமும் இல்லை .   சில நாட்களுக்கு முன் , எனக்கு ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்பட்டு , மிக வலுவாகதற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன . கடந்த சில மாதங்களாகவே நான் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 3

நான் மகாபாராயணை விட்டு வெளியேற இருந்தபோது நடந்த   பாபாவின் அற்புதங்கள் ஷீர்டி சாய் பக்தர் ஜெயஸ்ரீ ஜி கூறுகிறார்: சாய் ராம். நான் ஜெயஸ்ரீ, சாய் பாபாவின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகளுக்கு சரியான வரன் கிடைக்காத காரணத்தினாலும், என் மூத்த மகளுக்கு விசா கிடைக்காதது தொடர்பான பிரச்சினைகளாலும் நான் மனம் வருந்தினேன். பாராயணம் செய்தாலும்  கூட பிரச்சனை சுலபமாக தீர்வதாக தெரியவில்லை. சிவராத்திரி காலையில், பாராயணம் செய்த பிறகு நான் மகாபாராயணை நிறுத்தலாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் என் குடும்பத்தில் ஒருபோதும் நல்ல விஷயங்கள் நடக்காது. நான் பாபாவிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், எங்கள் குடும்பத்தை நீங்கள் ஆசீர்வதிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். எங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் மாற்ற முடியாது என்பது எங்கள் கர்மா தான். ” ஆனால் உண்மையில்  நண்பர்களே! அதே நாளில் இரவில் பாபா தனது அற்புதங்களைக் காட்டினார். என் மூத்த மகளுக்கு விசா கிடைத்தது, என் இரண்டாவது மகளை அவளுடைய சக ஊழியர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவளிடம் கூற...