பக்தர் அனுபவம் - ரமணா
ஓம் சாய் ராம்,
ஹாய் ஹெடல்,(Hetal)
இது எனது அனுபவங்களில் ஒன்றாகும். இதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2001 ஆம் ஆண்டில், நான் ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்யத் தொடங்கினேன். இந்த வேலைக்கு முன்பு நான் ஒவ்வொரு வியாழக்கிழமை ஷீர்டி சாய் பாபா கோயிலுக்கு வருவேன். நான் இரவு ஷிப்டில் வேலை செய்ய வேண்டியிருந்ததால், நான் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனுமதி பெற்றுக் கொண்டேன், எனவே மாலை ஆரத்திக்குப் பிறகு நான் வேலைக்குச் செல்ல முடியும். ஒரு வியாழக்கிழமை நான் இரவு 8:00 மணிக்கு தொடங்க வேண்டும், ஆனால், மாலை ஆரத்தியில் கலந்து கொள்ள முடியவில்லை, மிகவும் வருத்தமாக இருந்தது. கோவில் தெருவைக் கடந்து செல்லும் போது, ஆரத்தியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு என்னை மன்னிக்கும்படி பாபாவிடம் கேட்டேன்.
பல்பொருள் அங்காடியில் நாங்கள் பிரதான கதவை நடு இரவு 12:00 மணிக்கு மூடிவிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறிய ஜன்னல் மூலமாக வியாபாரம் செய்வோம்.அதிகாலை 2:00 மணியளவில் ஒரு வயதான கிறிஸ்டியன் கன்னிகாஸ்திரி தனது டிரைவருடன் தனது காருக்கு பெட்ரோல் போட வந்தார் . பாதுகாப்பு மற்றும் துப்புரவு காரணங்களால் நான் யாரையும் கடைக்குள் அனுமதிக்கக் கூடாது. ஆனால் நான் அவர்களை கடைக்குள் அனுமதித்தேன். கன்னிகாஸ்திரி கடைக்குள் வந்து சில பே டே மிட்டாய்கள் வாங்கினார். மற்றும் டிரைவர் சுமார் 100.00 டாலருக்கு பெட்ரோல் நிரப்பினார், கன்னிகாஸ்திரி எல்லா பணத்தையும் செலுத்தினார், அவர் கடையில் இருந்த எல்லா நேரங்களிலும் கடவுள் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். அவர்கள் கிளம்பும்போது நான் என் அறைக்கு வெளியே சென்று அவர்களுக்காக மூடிய கதவைத் திறந்தேன்.
கன்னிகாஸ்திரி எதையோ மறந்துவிட்டு திரும்பி வந்தார், கடையைச் சுற்றிச் சென்று இன்னும் சில மிட்டாய்களை வாங்கினார், கன்னிகாஸ்திரி அவர்கள் மிட்டாய்களுக்கு முழுத் தொகையையும் செலுத்தினார் . மேலும் அவர் எனக்கு 5 மிட்டாய்களைக் கொடுத்தார், மீண்டும் அதை விற்க வேண்டாம் என்று சொன்னார். கன்னிகாஸ்திரி அவர்கள் வெளியேறும்போது நான் வெளியே சென்று அவர்களிடம் “நான் உங்கள் கால்களைத் தொட முடியுமா” என்று கேட்டேன். அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆம், நான் அவர்கள் கால்களை தொட்டபோது, “சாய் உன்னை பாதுகாப்பார்" என்று சொன்னார். அவர்கள் எனக்கு மேலும் 4 மிட்டாய்களைக் கொடுத்தார், அதை என் மனைவி, மகள் மற்றும் என் மகனுடன் பகிர்ந்து கொள்ளும்படி சொன்னார். அவர்களிடமிருந்து சாயியின் பெயரையும், என் குடும்பத்தின் உறுப்பினர்களின் பெயர்களையும் தனித்தனியாக சொன்னபொழுதுநான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இந்த அனுபவத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன், ஆரத்திக்கு செல்ல முடியாததால் என்னை ஆசீர்வதிக்க பாபாவே கன்னிகாஸ்திரி உருவில் என்னிடம் வந்தார் என்று நம்புகிறேன். என் குழந்தை பருவத்திலிருந்தே நான் கடவுளை நம்புகிறேன்.
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். எனது திருமணத்திற்குப் பிறகு நான் முதன்முதலில் தில்ஷுக்நகரில் உள்ள சாய் பாபா கோயிலுக்குச் சென்றேன், நான் இரண்டு முறை ஷீர்டிக்குச் சென்றேன்.இந்த சம்பவம் ஷீர்டி சாய் பாபா கோவில்களில் பெரும்பாலானவற்றில் காணப்படும் ஒரு வசனத்தை நினைவூட்டுகிறது, "நீங்கள் என்னைப் பார்த்தால், நான் உங்களைப் பார்க்கிறேன்". இங்கே நான் கவனித்த மற்றொரு விஷயம் என்னவென்றால், வயதான கன்னியாஸ்திரி முதலில் 5 மிட்டாய்களைக் கொடுத்தார், பின்னர் 4 கொடுத்தார், மொத்தம் 9 கொடுத்தார் (ஷீர்டி சாய் பாபா 9 வகையான பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்தார், மேலும் அவர் 9 நாணயங்களை லட்சுமிபாய்க்கு மகாசமாதி நேரத்தில் கொடுத்தார்). சீரடி சாய் பாபா அவர்களின் அற்புதமான லீலை இது என்றுதான் சொல்வேன்.
சாய் பக்தர்
ரமணா
டிசம்பர் 2008
http://www.shirdisaibabaexperiences.org இருந்து மொழிபெயர்க்கப்பட்டது

Comments
Post a Comment