Skip to main content

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 10





பாபாவின் தெய்வீக அருளால்...


என் பெயர் கருணா கீர்த்தி.  எனது அற்புதமான அதிசயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்அன்புள்ள பாபா, நீங்கள் எப்போதுமே எனக்காக, ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு பிரச்சனையிலும் இருந்திருக்கிறீர்கள். பாபா உங்களுக்குத் தெரியும், நான் கடைசி மூன்று ஆண்டுகள் வேலை மாற்ற முயற்சித்தேன். நான் பல நேர்காணல்களைக் கொடுத்தேன், சிறப்பாக செயல்பட்டேன், ஆனாலும்  வேலை கிடைக்கவில்லை. நான் மிகவும் முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமடைந்தேன். விரக்தியும், குறைந்த நம்பிக்கையும்  வாழ்க்கை சென்றது. பின்னர் எனது சகோதரர் கமல் மஹாபாராயண் (மாஸ் குழு பிரார்த்தனை மற்றும் ஸ்ரீ சாய் சரித்திரத்தைப் படித்தல்) பற்றி என்னிடம் கூறினார். நான் நீண்ட கால சாய் பக்தர், ஆனால் இந்த நேரத்தில் நான் குளோபல் மகாபாராயனில் பங்கேற்கும் மனநிலையில் இல்லை ஆனால் விருப்பமின்றி நான் சகோதரருடைய வார்த்தையின் பொருட்டு பங்கேற்றேன். நான் மகாபாராயண் செய்யத் தொடங்கியதிலிருந்து, பாபா எப்போதும் என் பக்கத்திலேயே இருப்பதை உணர்ந்தேன்.ஒரு நாள் ஒரு பிரபல நிறுவனத்தின் எச்.ஆரிடமிருந்து எனக்கு வேலை அழைப்பு வந்தது. நான் நடுநிலை உணர்வோடு நேர்காணல்களில் கலந்துகொண்டேன். நான்நேர்காணலின் இரு சுற்றுகளில் வெற்றி பெற்று விட்டேன், ஆனால் இறுதி அழைப்பு குறித்து  நான் உறுதியாக இல்லை. ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது  இறுதி அழைப்பு வந்தபொழுது . நான் பாபாவுக்கு மிகவும் நன்றி தெரிவித்தேன். வேறொரு வேலை கிடைக்க அவர் எனக்கு உதவினார்.மேலும் 2 மாதங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் அற்புதம் செய்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் மீண்டும் எனது சொந்த ஊருக்கு வந்தேன். எனது நிறுவனம் என்னை எனது சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்தது. தேவை இல்லாமல், சாய் என்னை  ஆசீர்வதித்து பல பல மகிழ்ச்சிகளை கொடுத்தார்.

https://worldshirdisaibaba.org/share-your-experience/ இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இறைவன் சாயை நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

  இந்தியாவைச் சேர்ந்த ஷீர்டி சாய் பக்தர் லலிதாஜி கூறுகிறார்: ஓம் சாய் ராம்! என் பெயர் லலிதா, பாபாவின் தீவிர பக்தர். நான் சமீபத்தில் எம்.பி.- 1895 குழுவில் சேர்ந்தேன், எனது ரோல் எண் 37 ஆகும். நாங்கள் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறோம். நான் பாபாவை உறுதியாக நம்புகிறேன், என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்திருப்பதைக் கண்டேன். மிக சமீபத்தில் நடந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். எங்கள் வீட்டை மாற்றும் போது எங்கள் வீட்டின் முக்கிய ஆவணங்களை எங்கேயோ வைத்தேன். நாங்கள் அதை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில், நான் பாபாவின் உதவியைக் கேட்டு தீவிரமாக பாபாவிடம் வேண்டினேன். ஆச்சரியப்படும் விதமாக பிற்பகலில், அந்த ஆவணங்களை படுக்கைக்கு அடியில் ஒரு கவரில் இருப்பதை கண்டேன். காலையில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, ​​படுக்கைக்கு அடியில் எதுமே இல்லை, ஆனால் மதியம் அதை நான் எடுத்தேன் பாபாவின் அருளால் தான் அது கிடைத்தது. இது மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடப்பதை நான் உணர்ந்துள்ளேன். எனக்காக எப்போதும் என்னுடனே இருக்கும், எப்போதும் என்னை வழிநடத்தும், அவ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 24

தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய சாய் அனைத்து சாய் குழந்தைகளுக்கும் வணக்கம் .  இன்று   தற்கொலை எண்ணங்களில் இருந்து என்னை தடுத்து நிறுத்தி நம்   சாய் செய்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன் .   நான் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறேன் , நான் வியாழக்கிழமை விரதம் ஆரம்பிக்க முடியுமா என்று என் சாயிடம் கெஞ்சினேன் . உண்ணாவிரதம் இருக்க யாரையும் பாபா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் . ஆனால் ஸ்ரீ ஷிர்டி சாய் அவர்களின் ஆசிகளுடன் , நான் வியாழன் நோன்பு   விரதம்   தொடங்கினேன் .  ( ஏற்கனவே பாபா விரதம் இருக்க என்ன சொன்னார் என்பது பற்றிய அனுபவத்தை நான் பகிர்ந்துள்ளேன் ).   138 வியாழன் முழு நாள் பட்டினி விரதம் இருந்திருந்தேன் . ஆனால் , நான் என் காதல் விஷயத்தில் எந்த .  எந்த முன்னேற்றமும் இல்லை .   சில நாட்களுக்கு முன் , எனக்கு ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்பட்டு , மிக வலுவாகதற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன . கடந்த சில மாதங்களாகவே நான் ...

சாய் பக்தர்களின் அனுபவங்கள் - 3

நான் மகாபாராயணை விட்டு வெளியேற இருந்தபோது நடந்த   பாபாவின் அற்புதங்கள் ஷீர்டி சாய் பக்தர் ஜெயஸ்ரீ ஜி கூறுகிறார்: சாய் ராம். நான் ஜெயஸ்ரீ, சாய் பாபாவின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகளுக்கு சரியான வரன் கிடைக்காத காரணத்தினாலும், என் மூத்த மகளுக்கு விசா கிடைக்காதது தொடர்பான பிரச்சினைகளாலும் நான் மனம் வருந்தினேன். பாராயணம் செய்தாலும்  கூட பிரச்சனை சுலபமாக தீர்வதாக தெரியவில்லை. சிவராத்திரி காலையில், பாராயணம் செய்த பிறகு நான் மகாபாராயணை நிறுத்தலாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் என் குடும்பத்தில் ஒருபோதும் நல்ல விஷயங்கள் நடக்காது. நான் பாபாவிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், எங்கள் குடும்பத்தை நீங்கள் ஆசீர்வதிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். எங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் மாற்ற முடியாது என்பது எங்கள் கர்மா தான். ” ஆனால் உண்மையில்  நண்பர்களே! அதே நாளில் இரவில் பாபா தனது அற்புதங்களைக் காட்டினார். என் மூத்த மகளுக்கு விசா கிடைத்தது, என் இரண்டாவது மகளை அவளுடைய சக ஊழியர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவளிடம் கூற...